எல்லை மீறிய குற்றச்சாட்டில் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது கைது செய்யப்பட்ட தமிழ்நாடு நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களையும் எதிர்வரும் 8-11-2024 ஆம் திகதிவரை தடுப்பு காவலில் வைக்குமாறு பதில் நீதவான் குமாரசுவாமி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை கைது செய்யப்படாத குறித்த படகின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
