1020 லீற்றர் டீசல் பதுக்கியவருக்கு 5000 ரூபாய் தண்ட பணம்

-பதுளை நிருபர்-

கடந்த 19ம் திகதி பதுளை இலங்கை போக்குவரத்து சபை நுழைவாயிலில் சிறிய ரக லொறி ஒன்றில் நுகர்வோர் அதிகார சபையினரால் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது லொறியிலிருந்து 1020 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டது

இதன்போது படல்கும்பரை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபரை நேற்று புதன்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, 1020 லீற்றர் டீசலை அரச உடமையாக்குமாறும், சந்தேக நபருக்கு 5000 ரூபாய் தண்டம் விதித்து நீதவான் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க