10 ரூபாய் தகராறு: அண்ணன் பேச மறுத்ததால் பெண் என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு

இந்தியாவில் அண்ணன் பேச மறுத்ததால் தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பழைய பல்லாவரம் சாரா நகரை சேர்ந்த குமரன் சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகளான மலர்விழி (வயது – 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்ஜினியரான மலர்விழி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது அண்ணன் விட்டல், மலர்விழியிடம் தனது செலவுக்கு பத்து ரூபாய் தருமாறு கேட்டார். ஆனால் மலர்விழியோ தன்னிடம் பணம் இல்லை என்று கூறி பணம் தர மறுத்துவிட்டார்.

இதனால் அண்ணன், தங்கை இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதும் கோபமடைந்த விட்டல், ‘இனி உன்னிடம் பேசமாட்டேன்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் அண்ணன் பேச மறுத்ததால் மனமுடைந்த மலர்விழி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.