10 பேரில் எண்மர் தொற்றுக்கு
2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவியத்திலிருந்து இங்கிலாந்தில் 10பேரில் எண்மருக்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 கோடியே 20 இலட்சம் தொற்றாளர்கள் மற்றும் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 980 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் ஒமைக்ரோன், பிறழ்வும் அதன் துணை பிறழ்வான BA.2 உம் இங்கிலாந்தில் பரவுகின்றன. இவற்றால் உயிரிழப்பு குறைவாகவுள்ளபோதிலும் மருத்துவமனைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனிடையே கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டமையே இங்கிலாந்தில் தொற்று அதிகரிக்கக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது