ஹம்பாந்தோட்டைக்கு வருகிறது சீனாவின் விண்வெளி ஆய்வுக்கப்பல் : கண்காணிப்பை பலப்படுத்தியுள்ள இந்தியா

சீனாவின் விண்வெளி செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் யுவான்வாங் 5 (“Yuan Wang 5) இந்தியப் பெருங்கடலில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு ஆகியவற்றை நடத்துவதற்கு ஆகஸ்ட் 11 அன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நுழையவுள்ளதான செய்தியைத் தொடர்ந்து, இந்தியா தனது தென் பிராந்தியத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

.இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையை இலக்காக கொண்டு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இந்த சீன கப்பல் வருவது இந்தியாவில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ‘த எக்னாமிக் டைம்ஸ்’ செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இந்த சீனக் கப்பல் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இலங்கை கடற்பரப்பில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்குப் பகுதியில் கணினி மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு கண்காணிப்பு ஆகியவற்றிற்காக கப்பல் தனது செயற்கைக்கோள் தொலைக்காட்சி அமைப்பை இயக்க முடியும்.

2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறானதொரு சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

2014ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் சீன நீர்மூழ்கிக் கப்பல் நங்கூரமிட்டது இந்தியாவையும் கோபப்படுத்தியது.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இத்தகைய கப்பல் வருவதை எங்களிடம் உறுதிப்படுத்தவில்லை’ என்று பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் தி ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் கப்பலின் வருகையை BRISL (Belt & Road Initiative Sri Lanka) என்ற கொழும்பை தளமாகக் கொண்ட அமைப்பானது, ‘யுவான் வாங் 5, ஜூலை 13 அன்று சீன துறைமுகமான ஜியாங்யினிலிருந்து புறப்பட்டு, தாய்வானைக் கடந்தது, இப்போது கிழக்கு சீனக் கடலில் உள்ளது ஆகஸ்ட் 11 முதல் இலங்கையின் ஹம்பாந்தோட்iட துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 17 மற்றும் செப்ரெம்பர் வரை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்குப் பகுதியில் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172