
ஸ்ரீ மஹா போதியை வழிபட்ட இந்தியப் பிரதமர்
அநுராதபுரத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அநுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர்,
“அநுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் ஜனாதிபதி திசாநாயக்கவுடன் பிரார்த்தனை செய்தேன்.
பௌத்த மதத்தின் மிகவும் மதிக்கப்படும் இடங்களில் ஒன்றில் இருப்பது மிகவும் பணிவான தருணம். இது அமைதி, ஞானம் மற்றும் ஆன்மீக தொடர்ச்சியின் உயிருள்ள சின்னமாகும். புத்தரின் போதனைகள் எப்போதும் நம்மை வழிநடத்தட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.