-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீர் திட்டத்தை ஹர்ஷினி குமாரி என்ற தம்பதியினர் வழங்கி வைத்தனர்.
கோமரங்கடவல-கல்யானபுர பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ பண்டார குணதிலக என்ற பெண் தனது மகனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நிறுத்திய போது, இவ்வைத்திய சாலையில் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லாமையினால் கடைகளில் சுத்தமான குடிநீர் போதல்களை வாங்கியதாகவும், பணமின்றி வரும் நோயாளர்கள் சுத்தமான குடிநீரின்றி பல சிரமங்களை எதிர்நோக்கி வந்ததை அவதானித்ததாகவும், இதனால் தனது சகோதரியிடம் கூறியதாகவும், இதனையடுத்து கொழும்பில் ஊடக நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வரும் ஹர்ஷினி குமாரி என்ற தம்பதியினர் இவ் வைத்தியசாலைக்கு வருகை தந்து சுத்தமான குடிநீர் திட்டத்தை வழங்கி வைத்தனர்.
இத்திட்டத்தின் ஊடாக பல நோயாளர்கள் நன்மை பெறுவதுடன் கடமையாற்றும் ஊழியர்களும் நன்மை அடைந்துள்ளனர்.
சுத்தமான குடிநீர் திட்டத்தை உத்தியோகபூர்வமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை வைத்தியர் லசித் திலகரட்னவிடம் கையளித்தனர்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்த தம்பதியினருக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தெரிவித்துள்ளது.
இதே போல் நாமும் நல்ல செயற்பாடுகளை செய்வதற்கு முன்வர வேண்டும் எனவும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

