வேலை வாய்ப்புக்காக காத்திருந்த இளைஞர் யுவதிகள் பங்கேற்ற தொழில் சந்தை
-மன்னார் நிருபர்-
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை தொழிற் சந்தை நடாத்தப்பட்டது.
குறித்த தொழில் சந்தையானது இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது.
இதன் போது பல தொழில் வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார்.
மேலும், பிரதேசச் செயலாளர், திணைக்கள தலைவர்கள், தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது, வருகை தந்த தொழில் வழங்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தமது நிறுவனங்கள் ஊடாக எவ்வாறு தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்? அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.