வேலையில்லாப் பட்டதாரிகள் விடயத்தில் தோல்வியடைந்தார் ஜனாதிபதி

வேலையில்லாப் பட்டதாரிகள் பாரதூரமாக நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

35,000 மேற்பட்டவர்கள் வேலையில்லா பட்டதாரிகளாக இருக்கிறார்கள். 20,000 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு அனுப்புகிறோம் என்று உங்களுடைய கொள்கைப் பிரகடனத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இந்த செயற்பாடு நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொள்கைப் பிரகடனத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தாலும் 30,000 தொடக்கம் 40,000 வரையான பட்டதாரிகளுக்கு நிலையான ஒரு வேலை வாய்ப்பை வழங்குவதற்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக வழி கூறுவதற்கு ஜனாதிபதி தோல்வி அடைந்திருக்கிறார்.

ஜனாதிபதி வடமத்திய மாகாணத்தில் பட்டதாரிகளை சந்தித்து இருக்கிறார். பரீட்சைபெறுபேறுகள் வெளியாவதற்கு முன்பதாகவே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு மாகாண ரீதியில் பல குறைபாடுகளுக்கு மத்தியில் வேலையில்லப் பட்டதாரிகள் காணப்படுகிறார்கள். அவர்கள் பாரதூரமாக நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் எனத்தெரிவித்தார்.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24