வெளிநாட்டு நாணயங்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி முதல் ஒரு மாதத்துக்கு இந்த நடைமுறை அமுலில் இருக்கும்.
வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்த சலுகை அறிவிக்கப்படடுள்ளது
அதன்படி, தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் மற்றும் வர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்கில் வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிட முடியும், அல்லது அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு லிற்பனை செய்ய முடியும்
இது தொடர்பான மேலதிக தகவல்களை அந்நிய செலாவணி திணைக்களத்தின் 0112 477 255, 0112 398 511 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும், என அறிவிக்கப்பட்டுள்ளது.