விளையாட்டு பயிற்சியை முடித்து விட்டு வந்த மாணவனுக்கு நேர்ந்த கதி

-யாழ் நிருபர்-

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்தி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மாணவன் உயிரிழந்துள்ளான்.

மீசாலை கிழக்கை சேர்ந்த சிவநாவலன் பரணிதரன் (வயது – 18) என்ற சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவனே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய மாணவனை மோதியதில் மாணவன் படுகாயமடைந்துள்ளான்.

காயமடைந்த மாணவன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.

இதன்போது மாணவன் பயணித்த துவிச்சக்கரவண்டி பல துண்டுகளாக சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்திற்கு காரணமான பேருந்து சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்