
விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி நகரப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், பரந்தன் பகுதியில் இருந்து முருகண்டி நோக்கி பயணித்த கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த துரைராசா டிலக்சன் (30 வயது) என்ற இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்
விபத்துடன் தொடர்புடைய கப் வாகன சாரதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.