விபத்தில் உயிரிழந்த யாசகரின் பையிலிருந்து 5 வங்கி கணக்கு புத்தகங்கள் மீட்பு
விபத்தில் உயிரிழந்த யாசகர் ஒருவரின் பையிலிருந்து 135,000 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ள நிலையில்;, அவர் பெயரில் ஐந்து வங்கிக் கணக்குகள் தொடர்பான புத்தகங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிததுள்ளனர்.
புத்தளம் – சிலாபம் வீதியில் அனவிலுந்தவ பகுதியில் கடந்த 5ஆம் திகதி சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் மோதியதில் உடப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த கதிரேசன் பாலமுருகன் (வயது -49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அனவிலுந்தாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவரது பையை சோதனை செய்ததில் ரூ.135,000 ரொக்கம் மற்றும் ரூ.47,000 மதிப்புள்ள அவரது கணக்குகளின் வங்கி புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணையில் அவர் பல ஆண்டுகளாக யாசகம் செய்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பொறுப்பதிகாரி மேற்கொண்டு வருகிறார்.