
வாகன விபத்து: 2 பேர் காயம்
களனி – பியகம வீதியில் பட்டிவில பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சக்கரம் கழன்று விழுந்ததால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, முச்சக்கரவண்டியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.