
வாகன இலக்கத்தகடுகளை மாற்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளும் நபர்களை கண்டறியும் செயலி
-பதுளை நிருபர்-
கடந்த 21 ம் திகதி முதல் வாகன இலக்கத்தகடுகளின் இறுதி இலக்கங்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாகன இலக்கத்தகடுகளை மாற்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் நபர்களை கண்டறிவதற்கான செயலி (App) மூலம் வாகனங்களை பசறை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக வகனங்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.
இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.