
வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு அதிகரிப்பு
வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு வாரத்தில் குறித்த அளவு எரிபொருள் வழங்கப்படும்
அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 04 லீற்றர் பெற்றோல், முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் பெற்றோல், வேன்களுக்கு 20 லீற்றர் பெற்றோல், கார்களுக்கு 20 லீற்றர் பெற்றோல், பிற வாகனங்களுக்கு 15 லீற்றர் பெற்றோல், லொறிகளுக்கு 50 லீற்றர் பெற்றோல்.
பேருந்துகளுக்கு 40 லீற்றர் டீசல், முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் டீசல், வேன்களுக்கு 20 லீற்றர் டீசல், கார்களுக்கு 20 லீற்றர் டீசல், பிற வாகனங்களுக்கு 15 லீற்றர் டீசல், லொறிகளுக்கு 50 லீற்றர் டீசல், வழங்கப்படும்.