சூரியனின் வருடாந்த வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு அட்சரேகைகளுக்கு நேராக சூரியன் பயணிக்கின்றது.
அந்தப் பயணத்தின் இறுதி நாளான இன்று வட மாகாணத்தின் சில பகுதிகளில் இந்த அபூர்வ நிகழ்வு நிகழவுள்ளது.
இன்று நண்பகல் 12:10 மணி அளவில் பண்டத்தரிப்பு, தெள்ளிப்பழை, வறுத்தலைவிளான், வசவிளான், மணற்காடு ஆகிய பகுதிகளில் சூரியன் மிகச்சரியாக தலைக்கு மேல் காணப்படும்.
‘நிழலற்ற’ நண்பகல் என்றால் சூரியன் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மிகச்சரியாக 90 பாகை கோணத்தில் (செங்குத்தாக) உச்சம் கொடுக்கும் போது, அவ்விடத்திலுள்ள பொருட்களின் நிழல் எப்பக்கமும் சாயாமல் மிகச்சரியாக அடியில் விழும்.
இதனால் நிழல் மறைந்தது போன்ற தோற்றம் ஏற்படும். இதையே ‘நிழலற்ற நண்பகல்’ என அழைக்கின்றோம்.