வங்காள விரிகுடாவில் உருவாகும் டானா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

2,426

வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்குப் பகுதியிலும் வடக்கு அந்தமான் பகுதியிலும் குறைந்த காற்றழுத்த வலயம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆழ் கடற்பகுதியில் நெடுநாள் மீன்பிடி படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எச்சரிக்கையாகச் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்குப் பகுதியிலும் வடக்கு அந்தமான் பகுதியிலும் உருவான இந்த குறைந்த காற்றழுத்த வலயம், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டானா புயல் 23ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரையை நோக்கி நகரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sureshkumar
Srinath