லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்

3,740 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இம்மாதத்தில் எரிவாயு கையிருப்பு 33,000 மெட்ரிக் தொன்னாக இருக்கும்

பொதுமக்களுக்கு தொடர்ந்து எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை சுமார் 80,000 ஆக இருந்த போதிலும், தற்போது அதனை 100,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24