
லசந்த அழகியவன்னவின் வீடு, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இருவர் கைது
கடந்த மே மாதம் 9ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்னவுக்குச் சொந்தமான கிரிந்திவெலவின் வீடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை குறித்த சந்தேக நபர்களை கைது செய்து கிரிந்திவெல பொலிஸில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
ஊராபொல பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.