ரஷ்ய பெண்ணின் உடையணிந்து திருடன் தப்பியோட்டம்

களுத்துறை பகுதியில் ரஷ்ய தம்பதியொருவரின் ஹோட்டல் அறைக்குள் புகுந்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை திருடிச் சென்றுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 20 அடி உயரமுள்ள சுவரில் இருந்து குதித்து அறைக்குள் நுழைந்து 200 அமெரிக்க டொலர்கள், ரூ.96, 000 மற்றும் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் ரஷ்ய பெண்ணின் ஆடையை அணிந்து கொண்டு சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் தப்பிச் சென்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்