ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த முன்னாள் பிரதி அமைச்சரின் மகன் தப்பியோட்டம்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக வீட்டிற்கு கடந்த 9 ஆம் திகதி தீ வைத்து சேதமாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும், முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் புதல்வர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்.

அவரை கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட தொகுதி அமைப்பாளர் பதவியையும் அந்த அரசியல்வாதியின் புதல்வர் வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆந் திகதி ஜனாதிபதி மாளிகையை போராட்டகாரர்கள் ஆக்கிரமித்த பின்னர், அரசியல்வாதியின் மகன் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்குச் சென்று சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டு, நாங்கள் ஜனாதிபதி மாளிகையை சோதனையிட்டேன், அதற்கு தகுதியானவர்களை வருமாறு தெரிவிக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீடு சோதனையிடப்பட்டதுடன், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதம் கிடைக்கும் வரை வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன் என வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அங்கிருந்து இந்த காணொளியை பதிவு செய்த பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு அவருடன் பல தடவை போராட்டங்களில் ஈடுபட்ட அரசியல்வாதி ஒருவருடன் குறித்த பெண் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவங்கள் தொடர்பான அனைத்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க