ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலையானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பைப் பெற்று இன்று வெள்ளிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான இவர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டு 2021 ஜனவரியில் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட ஜனாதிபதியின் மன்னிப்பின் பேரில் அவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்காலத்தில் நீதித்துறைக்கு எதிராக கருத்துக்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக ரஞ்சன் நேற்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதை அடுத்தும் மற்றும் தனது கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், மேற்படி கருத்துக்களை வாபஸ் பெறுவதாகவும் கூறி நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24