ரசிகரை தாக்க முற்பட்ட கிரிக்கட் வீரரின் மோசமான செயல்
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவரும் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரை தாக்க முயன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை ஃபதுல்லாவில் உள்ள கான் ஷேப் ஒஸ்மான் அலி மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
டாஸ் போடுவதற்கு முன் ஷகிப் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஷேக் சலாஹுதீன் ஆகியோர் அவர்களின் சுழல் பந்து பயிற்சியாளருடன் மைதானத்தில் உரையாடிக் கொண்டிருந்தபோது குறித்த ரசிகர் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற போது ரசிகரிடம் இருந்து ஷகிப் அல் ஹசன் போனை பறிக்க முயன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்