
யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
-யாழ் நிருபர்-
வடக்கு கிழக்கு ஆகிய மாகாணங்களின் சிவில் சமூகத்தின் எற்பாட்டில் காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்கள் பதவி விலக வேண்டகோரி இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கான வலுசேர்க்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைதிமுறையிலான கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதில், போராட்டக்காரர்களை கைது செய்வதை நிறுத்துக தடுத்து விடுவிக்கப்பட்ட போராட்டக்காரர்களை உடன் விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இவ் கவனயீர்ப்பு போராட்டம் ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.