யாழில் மணல் கடத்திய டிப்பரை வெடி வைத்து பிடித்த பொலிஸார்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன் கிழமை அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த உழவு இயந்திரம் குருநகர் பகுதியால் மணல் ஏற்றி கொண்டு பயணித்த வேளை, குருநகர் பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் பணிபுரியும் பொலிஸார் உழவு இயந்திரத்தை துரத்திச் சென்றனர். பின்னர் அரியாலை பகுதியில் வைத்து வெடி வைத்து உழவு இயந்திரத்தை மீட்டதுடன், உழவு இயந்திரத்தின் சாரதியையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உழவு இயந்திரத்துடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்