-யாழ் நிருபர்-
தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இராஜேந்திரன் கிறிஸ்ரி அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்று வரும் குறித்த நிகழ்வில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்,
தேர்தல் ஆணையாளர் நாயகம் தேர்தல் ஆணைக்குழு சமன் ஸ்ரீ ரத்னநாயக்க, யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.