மோட்டார் போக்குவரத்து காரியாலயத்துக்கும் பூட்டு
நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான காரியாலயம் இம்மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.
குறித்த அலுவலகம் வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்தப்படுத்தப்படுவதால், இவ்விரு நாட்களும் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதியில், 6 மற்றும் 7 வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்தப்படவுள்ளதால் அதற்கான வசதிகள் செய்து கொடுக்க தற்காலிகமாக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.