![](https://minnal24.com/wp-content/uploads/2024/12/ஆழிப்பேரலையின்-ஆறாத-வடுக்கள்-ஏற்பட்டு-20-வருடங்கள்-2024-12-31T132730.646.png)
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
மாத்தளை, தம்புள்ளை, தலகிரியாகம பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிசென்றவரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளை ஓட்டிசென்றவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.