மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் செயற்திட்டங்கள் என்பனவற்றை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் இடைநிறுத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் உத்தேச பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுதல், பகிர்தல், கையேடுகளை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகம் வாயிலாக வெளியிடுதல் என்பனவற்றுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அத்துடன் 3 ஆயிரத்து 658 மத்திய நிலையங்களில் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க