-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு கல்லடியில் குருதேவர் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 91 ஆவது ஜனன தின பூசை நேற்று சனிக்கிழமை மாலை புதுமுகத்துவாரம் காயத்திரி ஆலயத்தில் அபிஷேகத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து பஜனை, காயத்திரி பூசை,யாகம் என்பன நடைபெற்றது.
இதன்போது சுவாமிகளின் உருவப்படம் தாங்கிய பேழை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,பொன்னூஞ்சல் ஆட்டுதலுடன் நிகழ்வு நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.