முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தனவிற்கு விளக்கமறியல்

துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்தனகல்ல பதில் நீதவான் சிறிபால எம்.பத்திரனவின் உத்தரவுக்கமைய இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் அத்தனகல்ல வெலிகடமுல்ல பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தென்னந்தோப்பு காணியிலிருந்து டி.56 ரக துப்பாக்கி, 02 மகசீன்கள் மற்றும் 133 தோட்டாக்கள், 12 போர் துப்பாக்கி மற்றும் 06 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.