முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளார்

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள அவர் எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியா செல்லவுள்ளார்.

இம்மாத இறுதி வரை அங்கு  தங்கியிருக்கும் அவர், ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு மீள திரும்பவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.