முதியோர் இல்லங்களுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்-

இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் காணப்படும் 03 முதியோர் சங்கங்களுக்கு தலா ஒரு இலட்சம் பெறுமதியான காரியாலய தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ். எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய அதிகாரிகள், தேசிய செயலகத்தினால் கிராமிய முதியோர் குழுக்கள், மாகாண முதியோர் சபைகள், மாவட்ட முதியோர் சபைகள் ஆகியவற்றைப் பதிவு செய்தல், நாட் காப்பக நிலையங்களுக்கு நிதியுதவியளித்தல், மனோநிலை மற்றும் ஆன்மீக விருத்திகளை மேம்படுத்த உளவியல் ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், முதியோர் காப்பாளர்களைப் பயிற்றுவித்தல் போன்ற பிரதான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனூடாக முதியோர் தனிமையான வாழ்க்கையை நடத்துவதைத் தடுப்பதும், சமூகத்தில் அவர்களின் பங்குபற்றலை மேம்படுத்தலும் முக்கிய நோக்கமாகும்.

இலங்கை பூராவும் அரசினூடாக பேணப்பட்டு வரும் 06 முதியோர் இல்லங்கள் உள்ளதுடன், ஏனைய தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் அறக்கொடை நிறுவனங்களினூடாக பராமரிக்கப்படும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை 300 ஆகும் .

அதன் பிரகாரம் மொத்த முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை 306 ஆகும் . முதியோர்களுக்கென காணப்படும் அதிக கவனத்துடன் நிலையங்களின் மேற்குறிப்பிட்ட அனைத்து முதியோர்களுக்குப் பாதுகாப்பினை வழங்கும் எண்ணிக்கையினை அதிகரிக்கும் தேவை காணப்படுகின்றது .

முதியோர் இல்லங்களின் வாழும் முதியோர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 7500 ஆகும் . அதற்கு மேலாக 281 பிரதேச அதிகார சபைகள் காணப்படுவதுடன், தேசிய அதிகார சபையும் அமுல்படுத்தப்படுகின்றது .

இவ்வாறாக முதியோர்கள் தொடர்பில் நிறைவேற்றப்படு சேவைகளுக்காக உதவியினை வழங்கி முதியோர் சமுதாயத்திற்காக தன்னார்வத்து அர்ப்பணித்துள்ள சேவைகளை வழங்குவதற்குத் தேவையான அரச தலையீடுகளும் நடைபெற்று வருகின்றன, என்று தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கிராம சேவக நிருவக உத்தியோகத்தர் எச்.பி. இந்திர ஸ்ரீ யசரட்ன, சமூக சேவைப் பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ. யஹ்யால், கிராம உத்தியோகத்தர்களான யூ.எல் அமீர், எஸ்.எல். ஹம்சா எம்.ஜே.எம். அத்தீக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.