முடிவுக்கு வந்தது அல்-அசாத்தின் ஆட்சி
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள கிளர்ச்சியாளர்கள், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதையடுத்து, அந்த நாட்டு ஜனாதிபதி விமானத்தினூடாக வெளிநாடு ஒன்றுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் சிரியாவில் உள்ள அரச மற்றும் பொது நிறுவனங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் வரையில் முன்னாள் பிரதமரின் கண்காணிப்பில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
சிரிய மக்களால் தெரிவு செய்யப்படும் தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாக முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்