மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவை : ஜனாதிபதி வர்த்தமானி மூலம் அறிவிப்பு

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அறிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் நாளை வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணி முதல் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் இந்து வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைவாக, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தினவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வைத்தியசாலைகள் , முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் இதை ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு ,உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.