
மினுவாங்கொடை துப்பாக்கிச்சூடு: இருவர் கைது
கம்பகா மினுவங்கொடை – பத்தடுவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜா-எல மற்றும் ஏக்கல பகுதிகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான நபர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.