கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மிகவும் மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” (President of the Happiest Era) என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அத்துடன், ‘கே.ஜி.எஃப்’ (KGF) திரைப்படத் தொடரில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற இந்திய நடிகர் கருடா ராம் உள்ளிட்ட சர்வதேச விருந்தினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.










