மாலைதீவு கடற்பகுதியில் நவீன மீன்பிடி சாதனம்

மாலைதீவு கடற்பகுதி முழுவதும் உள்ள மீன்களை ஒரே இடத்தில் திரட்டும் FAD எனப்படும் சாதனங்களை நிறுவுவது குறித்து மாலைதீவு அரசுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சாதனங்கள் மீன்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது மட்டுமின்றி, கடலில் ஏற்படும் இரசாயன மற்றும் இயற்பியல் தரவுகளையும் சேகரிக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக மீன்பிடி துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இத்திட்டத்தை செயற்படுத்துவது குறித்து மாலைதீவு அரசாங்கம் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதனைத்தொடர்ந்து மீன்களை ஈர்க்கும் சாதனங்களைப் பொருத்தும் பணிகளில் சீன ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24