மாணவி துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது

வத்தேகம பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த 44 வயதுடைய கணிதப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தேகம பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் வகுப்பறையில் நீண்ட நாட்களாக குறித்த மாணவியை ஆசிரியர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமை பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.