மாணவர்களுக்கான கொடுப்பனவு உறுதிச்சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும் 6000 ரூபாய் உறுதிச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை குறித்த உறுதிச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க