மாட்டுடன் மோட்டார்சைக்கிள் மோதி இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கண்டாவலைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புளியம்பக்கடை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே விபத்தின்போது உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் இரண்டு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.