மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வரவேற்பு நிகழ்வு

-கல்முனை நிருபர்-

புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டீ. ஜி. மலின்டன் கொஸ்டாவை  வரவேற்கும் நிகழ்வும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று வியாழக்கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பி.அப்துல் வாஜித் ஆரம்ப உரையையும், பணிப்பாளர் தலைமை உரையையும் நிகழ்த்தியதுடன், பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது

மேலும், இந்நிகழ்வில் மாகாண பணிப்பாளருக்கு கல்முனை பிராந்திய பணிமனையினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.