
மஹிந்த மற்றும் பசில் ஆகியோருக்கான வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கான வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிய மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.