
மஹிந்திரா நிறுவனம் இலங்கைக்கு ரூ100 மில்லியன் நன்கொடை
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்திற்கு (Rebuilding Sri Lanka Fund) மஹிந்திரா இந்தியா நிறுவனம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 100 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இந்த நிதி உதவி கையளிக்கப்பட்டது.
மஹிந்திரா நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் சுஜீத் ஜயந்த் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இந்த நிதியை கையளித்தனர்.
இந்த நிகழ்வில் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தற்போதைய மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த மனிதாபிமான உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
