மஸ்கெலியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்றஸ்பி தோட்ட குமரித் தோட்டப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை இரவு ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சாமிமலை பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் சுப்பிரமணியம் ( வயது – 40) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் காணாமல்போயுள்ளார் என அவரின் மனைவியால் ஐந்து நாட்களுக்கு முன்னர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபர் நேற்று இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்