மருத மடு அன்னையின் திருச்சொரூப பவனி யாழிற்கு
-யாழ் நிருபர்-
மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி இன்று வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திற்கு வருகை தந்து அங்கு சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்று வருகின்றன.
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 5:00 மணிக்கு வருகை தந்து அங்கு சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
