மரண விசாரணை டிப்ளோமா பட்டம் பெற்றார் அல் ஜவாஹிர்

திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹிர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் நடாத்தப்பட்ட மரண விசாரணை பயிற்சி நெறியை பூர்த்திசெய்து நேற்று சனிக்கிழமை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டிப்ளோமா பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

மரண விசாரணை அதிகாரியாக இப்பிரதேசத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய இவர் சிறந்த தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளராகவும் ஆங்கிலமொழியில் சிறப்பு டிப்ளோமா பட்டத்தையும், மொழிபெயர்ப்பில் விஷேட டிப்ளோமா பட்டத்தையும் பூர்த்தி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண விசாரணை டிப்ளோமா பட்டம் பெற்றார் அல் ஜவாஹிர்