மயிலத்தமடு ஆக்கிரமிப்பை நிறுத்த கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்-

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்த உடனடியாக நிறுத்து கோரி அற்கான ஆதரவு செலுத்துமுகமாக யாழ்ப்பாண நல்லூர் ஆதீன திருஞானசம்பந்த முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று மாலை 05 மணியளவில் இடம்பெற்றது.

தமது கோரிக்கையினை நிலையிருத்திவாறு, கோசங்களை எழுப்பி தமது கவனயீர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேய்ச்சல் தரை தொடர்பான நீதிமன்ற சட்டத்தை உடனே அமுல் படுத்து, எமது பசுக்களை துன்புறுத்துவதையும், நிலங்களை ஆக்கிரமித்தலையும் உடனடியாக நிறுத்து, வாயில்லாத ஜீவன்களுக்கு வாயில் வெடிவைக்கும் கொடூரர்களை உடனடி கைது செய், பசுக்களைத் தெய்வமாக வழிபடும் நாங்கள் உணவின்றி பசுக்கள் படும் துன்பத்தை இனியும் சகியோம், மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பதை உடனடியாக நிறுத்து, கிழக்கின் பொருளாதாரதை நசுக்காதே என்ற கோசங்கள் இதன்போது எழுப்பப்பட்டன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய த.சித்தர்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய ஈ.சரவணபன், சுரேஷ் பிரேமச்சந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த இணைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.