மதுபானம் அருந்திகொண்டிருந்தபோது நடத்த அசம்பாவிதம்: இளைஞன் மரணம்

குருணாகல் பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன்வெல பகுதியில் மதுபானம் அருந்திகொண்டிருந்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

குருணாகல்இ வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் சக நண்பர்களுடன் மது அருந்திகொண்டிருந்த போது திடீர் சுகயீனம் காரணமாக பிங்கிரிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.